தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த கட்சிகள் கோரிக்கை - தலைமை தேர்தல் ஆணையர்

0 443

சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை

அரசியல் கட்சிகள், ஆட்சியர்கள், காவல் அதிகாரிகளுடன் நேற்று தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

பணப்பட்டுவாடாவை தடுப்பதோடு, சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது - தலைமை தேர்தல் ஆணையர்

பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை முற்றாகத் தடுக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தல் - ராஜிவ் குமார்

ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் - தலைமை தேர்தல் ஆணையர்

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன

தமிழ்நாட்டில் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட முதல் தலைமுறை வாக்காளர்கள் 5.26 லட்சம் பேர் உள்ளனர் - தலைமை தேர்தல் ஆணையர்

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்புப்படை போலீசாரை பாதுகாப்புப் பணியில் அமர்த்த அரசியல் கட்சிகள் கோரிக்கை

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதரப்படும்

சி-விஜில் செயலி மூலம் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார்கள் தெரிவிக்கலாம் - தலைமை தேர்தல் ஆணையர்

சி-விஜில் செயலி மூலம், வாக்குச்சாவடி விவரங்கள், வேட்பாளர்கள் குறித்த விவரங்களை, வாக்காளர்கள், பொதுமக்கள் அறியலாம்

தமிழ்நாட்டின் அண்டை மாநில எல்லையோரங்களில், 45 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் - ராஜிவ்குமார்

சி-விஜில் செயலி மூலம் புகாரளித்தால், 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் - தலைமை தேர்தல் ஆணையர்

தமிழ்நாட்டில், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, 5800 புகார்கள் பெறப்பட்டன - தலைமை தேர்தல் ஆணையர்

தேர்தல் விதிகள் அமலானவுடன், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை குறித்தும் தேர்தல் ஆணையம் கண்காணிக்கும் - ராஜிவ் குமார்

ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளும்

கட்சிகள் அளிக்கும் நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்கிறதா? என கேள்வி

தேர்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - ராஜிவ் குமார்

இணையவழி பணப்பட்டுவாடாவை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் மூலம் கண்காணிப்பு - ராஜிவ் குமார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments