இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹுவின் கருத்துக்கு அமெரிக்கா கண்டனம்
போர் முடிந்த பிறகும் இஸ்ரேல் ராணுவத்தை காஸாவில் இருந்து விலக்கப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு கூறியதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினாவில் நடைபெற்றுவரும் ஜி-20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், காஸாவை ஆக்கிரமிக்கவோ, அதன் எல்லைகளை சுருக்கவோ இஸ்ரேல் முயற்சித்தால் அமெரிக்கா அதற்கு நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்கும் என்றார்.
காஸாவை போலவே மற்றொரு பாலஸ்தீன பகுதியான மேற்கு கரையில் 3000 புதிய வீடுகளை கட்டி இஸ்ரேலியர்களை குடியமர்த்தப்போவதாக அந்நாட்டின் நிதியமைச்சர் தெரிவித்ததுக்கு கண்டனம் தெரிவித்த பிளிங்கன், அவ்வாறு செய்தால் அது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு தான் அச்சுறுத்தலாக அமையும் என்றார்.
Comments