காஸாவின் பாதுகாப்பு இஸ்ரேல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் - நேதன்யாகு
காஸா போர் முடிந்த பிறகு அப்பகுதியின் பாதுகாப்பு இஸ்ரேல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
போருக்குப் பிந்தைய இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமர்ப்பித்துள்ள திட்ட வரையறையில், காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் சுதந்திரமாகச் செயல்படும் என்றும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்பில் இல்லாத உள்ளூர் பாலஸ்தீன அதிகாரிகளால் காஸா நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்துடன் உடன்பாடு என்பது இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே எட்டப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள நேதன்யாகு, பாலஸ்தீனத்துக்கு ஒருமித்த அங்கீகாரத்தை வழங்கமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.
Comments