இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட புத்தரின் எலும்பு உள்ளிட்ட புனித நினைவுச் சின்னங்கள், பாங்காக்கில் காட்சிக்கு வைப்பு
இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட புத்தரின் எலும்பு உள்ளிட்ட புனித நினைவுச் சின்னங்கள், பாங்காக்கில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இது தொடர்பான நிகழ்ச்சியில், தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தாய்லாந்து மன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக, அந்நாட்டின் கோரிக்கையை ஏற்று கொண்டு செல்லப்பட்ட நினைவுச்சின்னங்கள், அடுத்த மாதம் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments