பிப்.25இல் தேசிய முதியோர் நல மருத்துவமனை மையத்தை திறக்கும் பிரதமர்
சென்னை கிண்டியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனை மையத்தை வரும் 25 ஆம் தேதி காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டி அளித்த அவர் புதிய திட்டப்பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட இருப்பதாக கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 ஆயிரம் பேரை பரிசோதனை செய்ததில் 541 பேருக்கு பல்வேறு விதமான புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், தொடக்கநிலை பாதிப்பு என்பதால் மிக எளிதாக அவர்களை சிகிச்சை மூலம் குணப்படுத்தும் முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
முன்னதாக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையை மேற்கு ஆஸ்திரேலியாவின் மருத்துவ துறை அமைச்சர் ஆம்பர் ஜாடே சாண்டர்ஸன் பார்வையிட்டார்.
Comments