அய்யோ... பிஞ்சு குழந்தைங்க உடம்பில் கடிச்சி வச்சி.. சுடு தண்ணீரை ஊத்தி இருக்காங்க..! பதை பதைப்பில் பணிப்பெண்

0 1005

சென்னை பெரும்பாக்கத்தில் பெற்ற தாயே இரண்டு வயது மகனை கடித்தும், சூடு வைத்தும், சுடுதண்ணீர் ஊற்றியும்  துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் விசாரணைக்கு தாய் ஒத்துழைக்க மறுக்கும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.. 

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ரீதேவி-கனகராஜ் என்ற தம்பதி வசித்து வந்தது.

திருமணம் ஆகி நீண்ட நாட்கள் குழந்தை இல்லாததால், பல கோயில்களில் வேண்டியதோடு சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றதன் பலனாய் ஸ்ரீதேவிக்கு ஒரே பிரசவத்தில் ஆண் பெண் என இரு குழந்தைகள் பிறந்துள்ளது.

தற்போது அந்த குழந்தைகளுக்கு இரண்டு வயது ஆகும் நிலையில் ஸ்ரீதேவியின் கணவர் கனகராஜ் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

ஸ்ரீதேவி , தனது 2 வயது மகன் தர்ஷன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறி MRI SCAN எடுக்க சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

குழந்தையை மருத்துவமனையில் உடன் இருந்து பராமரிக்க செங்குன்றம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பணிப்பெண்ணை ஆன்லைன் மூலம் வேலைக்கு வைத்தார்.

மருத்துவமனைக்கு வந்த பணிப்பெண் குழந்தை தர்ஷன் உடல் முழுவதும் காயங்களாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது அந்த சின்னஞ்சிறு குழந்தையை சூடு வைத்தும், கடித்தும், கிள்ளியும், சுட தண்ணீர் ஊற்றியும் கொடுமை படுத்தி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அதை தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள் ஒருவர் வீட்டிற்கு சென்று ஸ்ரீதேவியிடம் விசாரணை மேற்கொண்டனர்

இதில் குழந்தைக்கு கொடுமை நடந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தாய் ஸ்ரீதேவி விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மவுனமாக இருந்து வருவதாக கூறப்படுகின்றது.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையை சிகிச்சை முடிந்த பின்பு குழந்தைகள் பாதுகாப்பு நல குழும அதிகாரிகள் மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்க உள்ளனர்.

முன்னதாக ஸ்ரீதேவியிடம் இருந்த பெண் குழந்தையை பத்திரமாக மீட்டுச் சென்றனர்.

எதற்காக ஆண் குழந்தையை இவ்வளவு காயப்படுத்தி சித்ரவதை செய்தார் என்பதற்கான காரணத்தை அறிய
குழந்தைகள் நல் குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் கணவர் வெளி நாட்டில் பணிபுரியும் நிலையில் வீட்டில் தனியாக இரு குழந்தைகளுடன் இருந்ததால் மன ரீதியாக பாதிக்கப்பட்டாரா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments