மறைந்த ரஷ்யவின் எதிர்கட்சி தலைவர் நவல்னியின் மனைவி, மகளை சந்தித்து ஆறுதல் கூறிய ஜோ பைடன்
ரஷ்ய சிறையில் உயிரிழந்த அந்நாட்டு எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவல்னியின் மனைவியையும், மகளையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சந்தித்து ஆறுதல் கூறினார்.
புடின் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த நவல்னி மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதியப்பட்டு, 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அதிபர் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அண்மையில் ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள கொடூரமான சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நவல்னி, கடந்த வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
நவல்னியின் மறைவுக்கு ஏதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ரஷ்யாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையை பாதிக்கும் வகையில் பல புதிய தடைகளை விதிக்கப்போவதாக ஜோ பைடன் தெரிவித்தார்.
Comments