மாலத்தீவில் இந்தியா-இலங்கை-மாலத்தீவு கூட்டு கடற்படை பயிற்சி
சீனாவின் உளவுக் கப்பல் சுமார் ஒருமாத காலம் கடல் ஆராய்ச்சி செய்ததாகக் கூறப்படும் நிலையில் அக்கப்பல் பல்வேறு இடங்களில் சுற்றிவிட்டு மாலத்தீவின் மாலே துறைமுகத்தை நெருங்கியது. தங்கள் நாட்டில் சீனக்கப்பல் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களை நிரப்ப மாலத்தீவு அரசு அனுமதித்துள்ளது.
இந்நிலையில், மாலே கடல்பகுதியில் இந்தியா-இலங்கை-மாலத்தீவு கடற்படைகளின் "தோஸ்தி" போர்ப்பயிற்சி தொடங்கியுள்ளது. இதற்காக இரண்டு இந்தியப் போர்க்கப்பல்கள் மாலத்தீவுக்கு சென்றுள்ளன.
மூன்றுநாடுகள் ஒத்திகையின் போது சீனக் கப்பல் வருகை குறித்து இந்தியா மாலத்தீவு அரசிடம் ஆட்சேபம் எழுப்பியுள்ளது.
Comments