உக்ரைனுக்கு மேலும் 247 மில்லியன் டாலர் அளவிற்கு டென்மார்க் ராணுவ உதவி

0 333

ரஷ்யாவுடன் போரிடும் உக்ரைனுக்கு மேலும் 247 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை டென்மார்க் அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடரிக்சன், உக்ரைனுக்கு தற்போது அதிக உதவிகளைச் செய்யவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.

மேலும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு தனது நட்பு நாடுகளும் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனிடையே வரும் கோடைகாலத்திற்கு முன்பாக உக்ரைனுக்கு எஃப்16 விமானங்களை டென்மார்க் வழங்கும் எனவும் மெட்டே பிரடரிக்சன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments