சீனாவின் குவாங்சூ நகரில் கப்பல் மோதியதில் இரண்டாக உடைந்த பாலம்... 5 பேர் பலி - இருவர் மீட்பு
சீனாவின் குவாங்சூ நகரில் பாலத்தின் மீது கப்பல் மோதிய விபத்தில் பாலம் இரண்டாக உடைந்து 5 பேர் உயிரிழந்தனர். நன்ஷா மாவட்டத்தில் உள்ள லிக்சின்ஷா பாலத்தின் தூண்களுக்கு நடுவே கடந்து செல்ல முயன்ற கப்பல் ஒன்று கட்டுப்பாட்டினை இழந்து மோதியது. இதில் பாலம் இரண்டு துண்டுகளாக உடைந்து நொறுங்கியது.
அப்போது பாலத்தில் வாகனங்களில் சென்று கொண்டிருந்த சிலர் கடலிலும், கப்பலிலும் விழுந்தனர். இவர்களில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், படுகாயமடைந்த இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக அருகில் உள்ள ஷான்மின் தீவுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments