விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே சுதீஷுடம் ரூ.43 கோடி மோசடி என குற்றச்சாட்டு - லோகா டெவலப்பர் கட்டுமான நிறுவன உரிமையாளர் கைது

0 551

விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷுடம் 43 கோடி ரூபாய் பண மோசடி செய்த புகாரில் லோகா டெவலப்பர் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா கைது செய்யப்பட்டார்.

சுதிஷுக்கு சொந்தமாக மாதவரத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில், 234 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அதில் 78 வீடுகளை தமக்கு ஒதுக்கும் வகையில் லோகா டெவலர்ப்பர் நிறுவனத்துடன் சுதீஷ் ஒப்பந்தம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

அவற்றுள் 48 வீடுகளை கட்டுமான நிறுவனம் தமது கையெழுத்தை போலீயாக போட்டு விற்றுவிட்டதாக சுதீஷின் மனைவி அளித்த புகாரின் பேரில், உரிமையாளர் சந்தோஷ் சர்மாவையும், மேலாளர் சாகரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், வீடுகளை வாங்க 200 பேர், தாங்கள் 80 முதல் 90 லட்ச ரூபாய் வரை முன் பணம் செலுத்தியும் இதுவரை வீடு ஒப்படைக்கவில்லை என சென்னை காவல் ஆணையரகத்தில் கட்டுமான நிறுவனம் மீது புகார் அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments