சுவற்றில் சாய்த்து வைத்திருந்த கடப்பாக்கல்லுக்குள் புகுந்த பூனைக்குட்டியைப் பிடிப்பதற்காக கல்லின் இடைவெளிக்குள் நுழைந்த சிறுவன் உயிரிழப்பு..!
சென்னை கோவிலம்பாக்கத்தில் சுவற்றில் சாய்த்துவைத்திருந்த கடப்பாக்கல்லுக்குள் புகுந்த பூனைக்குட்டியை பிடிப்பதற்காக கவின் என்ற 5 வயது சிறுவன் முட்டிபோட்டவாறு கல்லின் இடைவெளிக்குள் நுழைந்துள்ளான்.
பூனைக்குட்டி மறுபுறம் வெளியேறிவிட்ட நிலையில், நிமிர்ந்து எழ முயன்ற கவின் மீது கடப்பாக்கல் விழுந்ததாகக் கூறப்படுகிறது. கழுத்தின்மீது கல் விழுந்ததாகக் கூறப்படும் நிலையில், கவினால் சத்தம் எழுப்பவும் முடியாமல் பரிதாபமாக இறந்துள்ளான்.
Comments