அமெரிக்காவில் கூரிய ஆயுதம் என நினைத்து பிளாஸ்ட்டிக் ஸ்பூனை வைத்திருந்த நபரை போலீசார் சுட்டுக்கொலை

0 490

அமெரிக்காவில் கூரிய ஆயுதம் என நினைத்து பிளாஸ்ட்டிக் ஸ்பூனை வைத்திருந்த நபரை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள ஒரு கிடங்கில் புகுந்த நபர், குடிபோதையில் கூரிய ஆயுதத்தை காட்டி மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்றபோது, ஜேசன் லீ மக்கானி என்ற அந்த நபர் சாவகாசமாக போலீசாரை நோக்கி வந்தார்.

அவரை கைகளை உயர்த்தும்படி போலீசார் எச்சரித்த போது, முதலில் பயந்ததுபோல் நடித்து பின்னர் காவல்துறையினரை தாக்க முயற்சித்தார். இதனால் போலீசார் அவரை சுட்டுக்கொன்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments