தமிழகத்தின் இசைவின்றி ஒரு செங்கல்லை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்

0 352

கடைசியாக நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக தரப்பில் மேகதாது அணை பிரச்சினையை எழுப்பினர் - துரைமுருகன்

உச்சநீதிமன்றம் இந்த திட்டத்திற்கு எந்த தடையும் விதிக்கவில்லை எனக்கூறி விவாதிக்கலாம் என கர்நாடக அதிகாரிகள் கூறினர் - துரைமுருகன்

கர்நாடகாவை தவிர மற்ற மாநில அரசு அதிகாரிகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறினர் - அமைச்சர் துரைமுருகன்

தமிழகம், புதுவை, கேரளாவும் மேகதாது குறித்து விவாதிக்க வேண்டாம் என கருத்து கூறினர் - அமைச்சர்

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளோம் - அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தின் இசைவின்றி ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது என்பதை ஆணித்தரமாக பேரவையில் பதிவு செய்கிறேன் - துரைமுருகன்

கர்நாடகா அரசு பணம் ஒதுக்குவதாக சொன்னாலும் தமிழகத்தின் இசைவின்றி மேகதாதுவை கட்டி விட முடியாது - துரைமுருகன்

தமிழகத்தில் பிறந்த யாரும், எந்த கட்சியாக இருந்தாலும் மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டார்கள் - துரைமுருகன்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments