விவசாயிகளின் பெயர்களில் குண்டர்களை அனுமதிப்பதாக பஞ்சாப் அரசு மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
விவசாயிகள் என்ற பெயரில் குண்டர்களை அனுப்பி கலவரத்தில் ஈடுபடுவதாக பஞ்சாப் அரசை மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சம் எழுதியுள்ள கடிதத்தில், பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ளது.
மேலும், அண்டை மாநிலங்களில் அமைதியின்மை மற்றும் சீர்கேட்டை பரப்பும் நோக்கத்துடன் பஞ்சாப் அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
எனவே போராட்டம் என்ற பெயரில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பதில் அனுப்பியுள்ள பஞ்சாப் தலைமைச் செயலாளர் அனுராக் வர்மா, கண்ணீர்புகை, ரப்பர் தோட்டாக்கள், உடல் பலம் மற்றும் ஹரியானா காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் மூலம் இதுவரை 160 பேர் காயமடைந்திருந்தாலும், பஞ்சாப் அமைதியைக் காத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Comments