அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் மீது கூடுதலாக 400 சவரன் நகை வரதட்சணையாக கேட்பதாக புகார்

0 490

திருமணத்தின் போது 600 சவரன் நகை, 20 கிலோ வெள்ளி, ஆடி மற்றும் பி.எம்.டபிள்யூ சொகுசு கார்கள், ரேடோ வாட்ச், வைர மோதிரங்களை வரதட்சனையாக கொடுத்தும் மேலும் 400 சவரனை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியதாக அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ மகன் மீது அவரது மனைவி குற்றஞ்சாட்டி உள்ளார்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தனது மகளான மருத்துவர் சுருதி பிரியதர்ஷினிக்கும் முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தனின் மகனும் தற்போதைய மாநகராட்சி கவுன்சிலருமான சதீஷ்குமாருக்கும் 2018ம் ஆண்டில் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது கூடுதல் வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்தி வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments