தாயை விமர்சித்த ஆட்டோ ஓட்டுனரை ஏறி மிதித்த போலீஸ்காரர்..! திருப்பி தாக்கியதால் பரபரப்பு
கோவையில் வாகனச்சோதனையின் போது வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆட்டோ ஓட்டுனரை போக்குவரத்து காவலர் ஏறி மிதித்த நிலையில் பதிலுக்கு ஆட்டோ ஓட்டுனரும் தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த காவலர்கள் ஆட்டோ ஓட்டுனரை அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
அந்த ஒரு ஆபாச வார்த்தையால் ஆவேசமான போக்குவரத்து போலீஸ் காரர் , பாய்ந்து வந்து ஆட்டோ ஓட்டுனரை ஏறி மிதித்த காட்சிகள் தான் இவை,,!
கோவை பாலசுந்தரம் சாலையில் போக்குவரத்து காவலர்கள் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து ஆர்சி புக் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பரிசோதித்துக் கொண்டிருந்தனர் . அந்த ஆட்டோ ஓட்டுனரை கீழே இறக்கி பரிசோதனை செய்ததில் அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. அவருக்கு அபராதம் விதித்ததுடன் ஆட்டோவையும் பறிமுதல் செய்வதாக போலீசார் கூறியதால் ஆத்திரத்தில் ஆட்டோ ஓட்டுனர் வாக்குவாதம் செய்தார்.
இதனால் அவரது தலையில் ஒரு காவலர் தட்டியதாக கூறப்படுகின்றது. உக்கிரமான, ஆட்டோ ஓட்டுனர் தன்னை தாக்கிய காவலரின் தாயை பற்றி மோசமாக பேச, அடுத்த வினாடி அந்த காவலர் ஆவேசமாக ஓடிவந்து அந்த ஆட்டோ ஓட்டுனரை ஏறி மிதித்தார். அவரது கால் சுளுக்கிய நிலையில், ஆட்டோ ஓட்டுனர் காவலரை திருப்பித் தாக்கினார்
இதனை பார்த்த அருகில் நின்ற போக்குவரத்து காவலர்கள், போலீஸ் மேலயே கை வைப்பியாடா என்று அடி வெளுத்தனர்
உடனடியாக அங்கு வரவழைக்கப்பட்ட காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்துச்செல்லப்பட்ட அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. போலீஸ்காரரின் புகாரின் பேரில் அந்த ஆட்டோ ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Comments