பட்டபகலிலே.. ஓடும் ரெயிலிலே.. பட்டிமன்ற பெண் பேச்சாளரிடமே.! காமுகனை கதறவிட்ட காட்சிகள்..! இனி கை அங்க போகுமாடா..?

0 1288

மயிலாடுதுறை அருகே ஓடும் ரெயிலில் தனியாக அமர்ந்திருந்த பட்டிமன்றப் பெண் பேச்சாளரிடம், போதை ஆசாமி ஒருவன் ஆபாச சைகை காட்டிய நிலையில், அவனுக்கு அஞ்சாமல் துணிச்சலாக, அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்திய அந்த பெண், அவனை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தார்

உதவிக்கு யாரும் அருகில் இல்லாத நிலையில் ஆபாச சைகை காட்டிய போதை ஆசாமிக்கு அஞ்சாமல் அவனை போலீசில் சிக்க வைத்த பட்டி மன்ற பேச்சாளர் யோக தர்ஷினி இவர் தான்..!

பட்டிமன்ற பேச்சாளர் யோக தர்ஷினி சம்பவத்தன்று காரைக்காலில் இருந்து மயிலாடுதுறை வழியாக பெங்களூர் செல்லும் ரயிலில் பயணித்தார். ரெயிலில் கூட்டமில்லாத நிலையில் தனியாக அமர்ந்திருந்த யோகதர்ஷினியின் இருக்கைக்கு எதிரே சென்று அமர்ந்த போதை ஆசாமி ஒருவன் ஆபாச செய்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த யோகதர்ஷினி உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார். பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்த மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் உதவி ஆய்வாளர் சாமிநாதன் என்பவர் அங்கு வர, அவரிடம் யோக தர்ஷினி நடந்தவற்றை தெரிவித்தார். தப்பிச்செல்ல முயன்றவனை மடக்கிப்பிடித்து வைத்ததால் அவன் வாய் விட்டு கதறும் நிலைக்கு தள்ளப்பட்டான்

உதவி ஆய்வாளர் சாமிநாதன் மற்றும் சக பயணிகள் அந்த போதை ஆசாமியை பிடித்து நெய்வேலியில் உள்ள ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வாட்ஸ் அப் வீடியோவில் பேசியுள்ள பட்டிமன்ற பேச்சாளர் யோகதர்ஷினி, ரயிலில் தவறான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து பெண்கள் துணிச்சலுடன் புகார் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments