இளம்பெண்ணின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற காதலன்.. வேறு பெண்ணை மணந்ததால் வர மறுத்த காதலி மீது தாக்குதல்..!
பேராவூரணியில் வீடு புகுந்து பெற்றோர் மற்றும் சகோதரர்களின் கண் முன்னால் பெண் ஒருவரின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
3 மாதங்களுக்கு முன் பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட காளீஸ்வரன் என்ற அந்த இளைஞர், ஓராண்டாக காதலித்த பெண்ணையும் தம்முடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாகவும் திருமணம் ஆனவருடன் வர முடியாது என அப்பெண் மறுத்ததால் மது போதையில் கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Comments