தென்னாப்பிரிக்காவில் இறைச்சிக்காக கால்நடைகளை ஏற்றி வந்த கப்பலில் இருந்து துர்நாற்றம் வீசியதாக புகார்
பிரேசில் நாட்டில் இருந்து ஈராக்கிற்கு 19,000 கால்நடைகளை ஏற்றிக் கொண்டு சென்ற கப்பல் ஒன்று, வழியில் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனுக்கு வந்தபோது கப்பலில் துர்நாற்றம் வீசியதாக புகார் எழுந்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு மேலாக கப்பலில் அடைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட கால்நடைகளின் கழிவால், துறைமுகம் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதாக கடலோரத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் கால்நடைகளை சித்ரவதைக்கு உள்ளாக்காமல் கொண்டு செல்வது பற்றி சம்மந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
Comments