குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடும் கணவர்... மனைவி தாக்கியத்தில் உயிரிழப்பு

0 656

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் குடிபோதையில் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி குடிபோதையில் மனைவியை கட்டையால் தாக்கும் போது வலி தாங்க முடியாத மனைவி சித்ரா கட்டையை பிடுங்கி கணவனின் தலையில் அடித்துள்ளார்.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாரிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சித்ரா மீது காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments