பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி ரூ.65 கோடி மோசடி செய்த கேரள இளைஞர் கைது
அதிக லாபம் கிடைக்கும் வகையில் பங்கு சந்தையில் முதலீடு செய்து தருவதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த 450 பேரிடம் பெறப்பட்ட சுமார் 65 கோடி ரூபாயை கிரிப்டோ கரன்சியாக மாற்றி போலியான செயலி ஒன்று உருவாக்கி மோசடியில் ஈடுபட்டதாக கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தனியார் நிறுவன ஊழியர் அளித்த புகாரில், ஆழ்வார்பேட்டையில் 'அட்வைசர் அண்ட் கன்சல்டிங்' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்த விஜயை கைது செய்த போலீஸார், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
Comments