சென்னையில் சாலை விபத்தில் சுயநினைவின்றி கிடந்த இளைஞருக்கு துரிதமாக செயல்பட்டு முதலுதவி அளித்த காவலர்
சென்னை காசிமேடு பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு காவலர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்தார்.
எஸ்.என்.செட்டி சாலையில் சுயநினைவின்றி இளைஞர் ஒருவர் இருப்பதைக் கண்ட காசிமேடு காவல்நிலைய ரோந்து வாகன ஓட்டுநரான விக்னேஷ் பாண்டியன் அவருக்கு சிகிச்சை அளித்தார்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அந்த இளைஞர் அனுப்பி வைக்கப்பட்டார்.
Comments