திரிஷாம்மா மன்னிச்சிடுங்க.. கூவத்தூர் ரகசியம் சொன்ன ex அதிமுக பிரமுகர் நடுக்கம்..! இது ஆக்க்ஷன் மேடம்... நம்பாதீங்க

0 1153

கூவத்தூர் ரகசியம் என்று நடிகை திரிஷா மற்றும் கருணாஸ் குறித்து அவதூறு பேசியதால், கண்டனத்துக்குள்ளான முன்னாள் அதிமுக பிரமுகர் சேலம் ஏ.வி ராஜூ பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்

அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டவர் சேலம் அழகாபுரம் ஏ.வி ராஜூ, இவர் தொலைக்காட்சி செய்தியாளர்களை அழைத்து கூவத்தூர் ரகசியம் சொல்வதாக கூறி முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம், நடிகை திரிஷா மற்றும் கருணாஸ் ஆகியோரை தொடர்பு படுத்தி சில தகவல்களை தெரிவித்திருந்தார்

ஏ.வி ராஜூவின் இந்த அவதூறு பேச்சுக்கு இயக்குனர் சேரன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகை திரிஷா மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக எக்ஸ் தளம் மூலம் எச்சரித்திருந்தார்.

இதையடுத்து நடுங்கிப்போன ஏ,வி ராஜூ, மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் பேசும் போது வார்த்தைகள் குளறிய நிலையில், கைகள் நடுங்கியபடியே இருந்தது.

ஏற்கனவே திரிஷாவை இழிவாக பேசியதால் மன்னிப்புக்கேட்ட மன்சூரலிகான் , இந்த விவகாரத்தில் திரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments