எல்லையைக் கடந்து தலைநகருக்குள் முற்றுகையிடத் தயாராக இருக்கும் விவசாயிகள்

0 428

மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் ஆயிரக்கணக்கில் இன்று டெல்லியை நோக்கி புறப்படுகின்றனர்.

ஹரியானா எல்லையில் போலீசார் தடுப்புகள் அமைத்து விவசாயிகளைத் தடுக்க பல மடங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். டெல்லி எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கான்கிரீட் தடுப்புகள், மின்வேலிகள், ராட்சத துறைமுக சரக்குக் கண்டெய்னர்களை வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை முறியடிக்க தங்கள் லாரிகளையும் வாகனங்களையும் அதற்கேற்றவாறு மாற்றியமைத்துள்ள விவசாயிகள் ரப்பர் குண்டுகள் கண்ணீர்ப் புகை போன்றவற்றைத் தடுக்கும் இரும்புத் தகடுகளை தங்கள் வாகனங்களின் முன்புறம் அமைத்து ஹரியானா எல்லையைக் கடக்கத் திட்டமிட்டுள்ளனர்.கண்ணீர்ப்புகையை எதிர்கொள்ள பலசுற்று துணிகளால் முகங்களை மூடிக் கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments