அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை : திரிஷா

0 655

தன்னைப் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

சமூகவலைதளத்தில் திரிஷா வெளியிட்டுள்ள பதிவில், கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் கீழே இறங்கக் கூடிய நபர்களைப் பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது என்று சாடியுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர் மீது உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கான பணியை தனது சட்ட வல்லுநர்கள் மேற்கொள்வார்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

திரிஷா பற்றிய அவதூறு பேச்சுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்,இயக்குநர் சேரன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே திரிஷா குறித்து பேசியதற்கு ஏ.வி.ராஜு மன்னிப்பு கேட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments