இளைஞரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை சிறைப்பிடித்து சடலத்துடன் மக்கள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற முக்கூட்டு கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவாசகம் என்ற விவசாயி உயிரிழந்தார்.
மோதிய பின் நிற்கமல் சென்றதாகக் கூறப்படும் பேருந்தை தோப்பு கொள்ளை இலங்கை தமிழர் முகாம் அருகே மக்கள் சிறை பிடித்தனர்.
விபத்து நேரிட்டு நீண்ட நேரமாகியும் உடலை ஏற்ற அமரர் ஊர்தி வரவில்லை எனக் கூறி சாலையில் கட்டை, கம்புகளை போட்டு மறியல் செய்தனர்.
Comments