கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்... 2024-25 வேளாண் பட்ஜெட் தாக்கல் : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

0 483

2024-25 வேளாண் பட்ஜெட் தாக்கல்

 

2020-21இல் 152 லட்சம் ஏக்கராக இருந்து சாகுபடி பரப்பு 2022-23இல் 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது

2022-23-ஆம் ஆண்டில் 114 மெட்ரிக் டன்னாக உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன

நடப்பாண்டில் மேலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன

கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

வேளாண் பணிகளுக்கான எந்திரங்களை மானிய விலையில் வழங்கி வருகிறோம்

வேளாண் பணி ஊதியம் அதிகரித்துள்ளது

பயிர் சாகுபடியில், இடுபொருட்களுக்கான செலவினத்தைவிட, வேளாண் பணிகளுக்கான ஊதியம் தற்போது அதிகமாக உள்ளது

ஊதிய உயர்வை எதிர்கொள்ள வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன

நுண் பாசனம் மூலம் பாசன பரப்பு அதிகரிப்பு

புதிய நீர் சேமிப்பு கட்டமைப்புகள், நுண்ணீர் பாசனம் மூலம் பாசனப் பரப்பு அதிகரித்துள்ளது

25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு

25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 4,436 கோடி பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது

ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 4,773 குளங்கள், ஊரணிகள், வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மேம்படுத்தப்பட்டன

விரைவில் தென் மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்தென் மாவட்ட பெருமழையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ. 2.74 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணத் தொகை

பெருமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 208 கோடியே 20 லட்சம் நிவாரணத்தொகை

மண்ணுயிர்க் காப்போம் திட்டம் அறிமுகம்

மண்ணுயிர் காத்து மன்னுயிர்க் காப்போம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது

புதிய திட்டத்தில் மண்ணுயிர் பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கவும் உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செயல்முறை ஊக்கப்படுத்தப்படும்

மண்ணுயிர் காத்து மன்னுயிர்க் காப்போம் திட்டத்துக்கு ரூ. 206 கோடி ஒதுக்கீடு

பசுந்தாள் உரம் பயிரிட ரூ. 20 கோடி

2 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

காப்பாற்றப்பட்ட 25000 ஏக்கர் பயிர்கள்

உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் 25 ஆயிரம் ஏக்கர் காப்பாற்றப்பட்டது

மண் புழு உரம் தயாரிக்க ரூ. 5 கோடி

மண் புழு உரம் தயாரிக்க 10 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு

ரசாயன உர பயன்பாட்டை குறைக்க நிதி

ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து மண்ணின் வளம் காக்க ரூ. 6 கோடியே 27 லட்சம் மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு

10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் விநியோகம்

வேம்பை பரவலாக்கம் செய்யும் வகையில் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வேளாண் காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகம்

வேம்பை பரவலாக்கம் செய்யும் திட்டத்துக்கு ரூ. 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு

உயிர்ம வேளாண்மைக்கு மாதிரிப் பண்ணைகள்

வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்கப்படும்

உயிர்ம வேளாண்மைக்கு இதர விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க ரூ. 38 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு

725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ. 27 கோடி நிதி ஒதுக்கீடு

ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகளுக்கு ரூ. 42 கோடி

14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ. 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

குமரி மாவட்டத்தில் தேனீ முனையம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 3 கோடியே 60 லட்சம் ஒதுக்கீட்டில் தேனீ முனையம் உருவாக்கப்படும்

ரூ. 5 கோடியில் 10 உழவர் அங்காடிகள்

10 உழவர் அங்காடிகள் 5 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடரும்

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2482 கிராம ஊராட்சிகளில் ரூ. 200 கோடியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்

ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்

கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்த ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற புதிய திட்டம் 15280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்

உயிரி பூச்சிக் கொல்லி வளர்க்க ரூ. 1 கோடி

ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக் கொல்லி தாவரங்கள் வளர்க்க ரூ. 1 கோடி

நெல்லில் தீமை விளைவிக்கும் பூச்சிகளை மேலாண்மை செய்ய விவசாயிகளுக்கும் உரிய பயிற்சி வழங்கப்படும்

ஆயிரம் ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்கள்

பாரம்பரிய நெல் ரகங்கள் ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்ய நடவடிக்கை

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சீவன் சம்பா

சீவன் சம்பா என்ற பெயரில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் நெல் ஆயிரம் ஏக்கர் அளவுக்கு சாகுபடி செய்ய விதை விநியோகிக்கப்படும்

பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்திக்கு ரூ. 50 லட்சம்

நெல் ஜெயராமன் மரபு சார் நெல் ரகங்களை பாதுகாக்க 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்படும்

10000 ஏக்கரில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு

மானாவரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்

சிறு தானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துகள் பயிரிட ரூ. 36 கோடி ஒதுக்கீடு

கால நிலை மாற்றம் பாதிக்காத கிராமங்களை உருவாக்க திட்டம்

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ. 1.48 கோடி ஒதுக்கீடு

ஊட்டச்சத்துகள் அளிக்கும் திரவ உயிர் உரம்

பயிர்களுக்கு பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துகளை எளிதில் அளிக்கும் திரவ உயிர் உரம் வழங்க ரூ. 7.5 கோடி ஒதுக்கீடு

துவரை சாகுபடியை அதிகரிக்க நிதி

சாகுபடி பரப்பு குறைந்துள்ள துவரையை கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்ய ரூ. 17.5 கோடி ஒதுக்கீடு

எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க நிதி

ஆண்டுக்கு 18.45 லட்சம் மெட்ரிக் டன் உணவு எண்ணெய் தேவை உள்ள நிலையில் ஆண்டுக்கு 4.88 லட்சம் டன் மட்டுமே உற்பத்தியாகிறது

எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க ரூ. 45 கோடி ஒதுக்கீடு

எள் சாகுபடியை அதிகரிக்கும் வகையில் 25 ஆயிரம் ஏக்கரில் கூடுதலாக பயிர் செய்ய ரூ. 3 கோடி ஒதுக்கீடு

சூரிய காந்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு

ஆமணக்கு சாகுபடியை 1500 ஏக்கர் அளவுக்கு அதிகரிக்க ரூ. 18 லட்சம் ஒதுக்கீடு

தரமான விதைகளை பயன்படுத்தி மகசூலை 15% அளவுக்கு அதிகரிக்க அறிவுறுத்தப்படும்

தரமான விதைகளை 50-60% மானிய விலையில் வழங்க ரூ. 35 கோடி ஒதுக்கீடு

50000 விவசாயிகள் பலனடையும் வகையில் நிலக்கடலை பயிர்களில் ஜிப்சம் ஊட்டச்சத்து இட ரூ. 1 கோடி ஒதுக்கீடு

ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானியங்கள்

சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை உள்ளிட்டவற்றின் சாகுபடியை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்

ரூ. 65.30 கோடியில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படும்

குறைந்த நீர் தேவைப்படும் மாற்றுப் பயிர் சாகுபடி

குறைந்த நீர் தேவைப்படும் வகையில் 1 லட்சம் ஏக்கரில் மாற்று பயிர் சாகுபடி திட்டம் ரூ. 12 கோடியில் செயல்படுத்தப்படும்

கிராம வேளாண் முன்னேற்ற குழுக்களுக்கு பயிற்சி

கிராம வேளாண் முன்னேற்ற குழுக்களுக்கு ரூ. 2.48 கோடி நிதியில் பயிற்சி வழங்கப்படும்

ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு கூடுதல் மானியம்

ஆதி திராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 20% கூடுதல் மானியம் வழங்க ரூ. 18 கோடி நிதி ஒதுக்கீடு

பருத்தி சாகுபடி பரப்பளவை அதிகரிக்க திட்டம்

பருத்தி சாகுபடி திட்டத்திற்கு ரூ. 14.20 கோடி ஒதுக்கீடு செய்து சாகுபடி பரப்பளவு 5.50 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்

விவசாயிகள், படித்த இளைஞர்களுக்கு பயிற்சி

15000 விவசாயிகள், 500 படித்த இளைஞர்களுக்கு வேளாண் மேம்பாட்டு பயிற்சிக்கு ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு

பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ. 1 கோடி மானியம்

பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க மானியமாக ரூ. 1 கோடி ஒதுக்கீடு

கரும்புக்கு ரூ. 215/டன் ஊக்கத் தொகை

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 215 ஊக்க தொகை வழங்க ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு

2023-24 அரவைப் பருவத்துக்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 215

சாகுபடி பரப்பு அதிகரிக்கவும் புதிய கரும்பு ரகங்கள் பயிரிடவும் ரூ. 7.92 கோடி நிதி ஒதுக்கீடு

கரும்பு சாகுபடி செலவை குறைத்து உற்பத்தியை அதிகரிக்க ரூ. 7.92 கோடி ஒதுக்கீடு

சக்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்த ரூ. 12.40 கோடி நிதி ஒதுக்கீடு

கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ. 20.43 கோடி ஒதுக்கீடு

விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுக்கு ரூ. 1775 கோடி

2024-25-இல் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ. 1775 கோடி ஒதுக்கீடு

நுண்ணீர் பாசனத்துக்கு ரூ. 773 கோடி

2.22 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்க 773.23 கோடி நிதி ஒதுக்கீடு

நிலத்தடி நீர் குறைந்து வரும் மாவட்டங்களுக்கு நுண்ணீர் பாசனத் திட்டத்தில் முக்கியத்துவம்

தானியங்கி மூலம் நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவ மானியம் வழங்க ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு

தானியங்கி நுண்ணுயிர் பாசன திட்டம் வேலை ஆள் தட்டுப்பாட்டை போக்கும்: அமைச்சர்

ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சிக்கு ரூ. 36 கோடி

ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 36.15 கோடி நிதி ஒதுக்கீடு

தென்னை சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகள் அறிய ரூ. 12 .50 கோடி ஒதுக்கீடு

தென்னை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்க 25000 ஏக்கரில் செயல் விளக்க திடல்கள் அமைக்கப்படும்

வறண்ட நிலங்களுக்கு தோட்டக்கலை திட்டம்

வறண்ட நிலங்களில் ரூ. 3.64 கோடியில் ஒருங்கிணைந்த தோட்டக் கலை மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்படும்

ரூ. 2.70 கோடியில் தோட்டக்கலை துறை சார்ந்த தரமான நடவு செடிகள் மானிய விலையில் வழங்கப்படும்

முக்கனி மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டம்

முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு

ஏற்றுமதிக்கான மாம்பழ உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 250 ஏக்கரில் புதிதாக சாகுபடி செய்ய ரூ. 27.48 கோடி ஒதுக்கீடு

வாழை மரங்கள் சாய்வதைத் தடுக்க மானியம்

வாழை மரங்கள் காற்றில் சாய்வதை தடுக்க 3500 ஏக்கரில் கம்பு மூலம் முட்டு கொடுக்க மானியம்

ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய ரூ. 12.73 கோடி நிதி ஒதுக்கீடு

பலா சாகுபடியை மேம்படுத்த ரூ. 1.14 கோடி

பலாப் பழங்களில் புதிய ரகங்களை 620 ஏக்கரில் பயிரிட ரூ. 1.14 கோடி ஒதுக்கீடு

சர்வதேச தோட்டக் கலை இயந்திரக் கண்காட்சி

சர்வதேச தோட்டக் கலைப் பண்ணை இயந்திரக் கண்காட்சியை இந்தாண்டு நடத்த ரூ. 10 கோடி ஒதுக்கீடு

கண்காட்சி மூலம் தோட்டக் கலைத்துறை இயந்திரங்களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த நடவடிக்கை

புதிய தோட்டக் கலை பண்ணைகள் அமைக்க ரூ. 10 கோடி

புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு

உதகை ரோஜா பூங்காவில் புதிய ரக ரோஜாக்கள்

உதகை ரோஜா பூங்காவில் ரூ. 5 லட்சம் நிதியில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம் செய்யப்படும்

செங்கை அருகே செம்பருத்தி உற்பத்தி மையம்

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ. 1 கோடியில் செம்பருத்தி உற்பத்தி மையம்

ரூ. 3.36 கோடியில் முந்திரி வளர்ச்சி திட்டம்

முந்திரி வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள ரூ. 3.36 கோடி ஒதுக்கீடு

ரூ. 1 கோடியில் முந்திரிக்கான செயல் விளக்க திடல்கள் உருவாக்கப்படும்

மரவள்ளியில் மாவுப் பூச்சியை கட்டுப்படுத்த மானியம்

மரவள்ளிப் பயிரில் மாவுப் பூச்சியை கட்டுப்படுத்த பின்னேற்பு மானியமாக ரூ. 1 கோடி ஒதுக்கீடு

ஏக்கர் ஒன்று ரூ. 480 வீதம் 20833 ஏக்கருக்கு மரவள்ளி மாவுப் பூச்சி கட்டுப்படுத்தும் மானியம் வழங்க முடிவு

பேரீச்சம் பழ சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 30 லட்சம்

தூத்துக்குடி, வேலூர், தருமபுரி, கரூர் மாவட்டங்களில் 250 ஏக்கரில் பேரீச்சை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ. 12000 மானியம்

மூலிகைப் பூக்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 5 கோடி

செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரிச் சென்னா, நித்ய கல்யாணி மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு

பந்தல் காய்களுக்கு நிரந்தர பந்தல் அமைக்க நிதி

விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி ஒதுக்கீடு

720 ஏக்கர் அளவுக்கு நிரந்தர பந்தல் அமைக்க நிதி உதவி வழங்க முடிவு

பாரம்பரிய காய்கறி சாகுபடிக்கு மானியம்

பாரம்பரிய காய்கறி ரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும் ரூ. 2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்

தோட்டக்கலை பயிர்களுக்கு செயல் விளக்கம்

தோட்டக்கலை பயிர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கும் வகையில் தாலுக்காவுக்கு ஒரு கிராமத்தில் செயல் விளக்க திடல்கள் அமைக்கப்படும்

முருங்கை மரங்களை மூட பிளாஸ்டிக் விரிப்பான்

நெகிழி விரிப்பான் மூலம் முருங்கை மரங்களை மூடி வைத்து பூக்கள் உதிர்வதை தடுக்க சோதனை முறையிலான திட்டம் அறிமுகம்

சிறு குறு விவசாயிகளுக்கு பவர் ட்ரில்லருக்கு மானியம்

சிறு குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பவர் ட்ரில்லருக்கு ரூ. 1.20 லட்சம் மானியம்

சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ. 170 கோடி ஒதுக்கீடு

தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள்

ரூ. 32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்

நெல் உலர்த்தும் இயந்திரங்களை வாங்க மானியம்

10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்களை வாங்குவதற்கான மானியம் வழங்க ரூ. 90 லட்சம் ஒதுக்கீடு

நெல் உலர்த்தும் இயந்திரங்களை வாங்குவதற்கான மானியம் 50 %-இல் இருந்து 60%-ஆக அதிகரிப்பு

சூரிய சக்தி மின் வேலி அமைக்க ரூ. 2 கோடி

வன விலங்குகளால் பயிர்கள் சேதப்படுவதை தவிர்க்க சூரிய சக்தி மின் வேலிகள் அமைக்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு

காவிரி வாய்க்கால்களை தூர் வார ரூ. 10 கோடி

டெல்டா மாவட்டங்களில் காவிரி வாய்க்கால்களை தூர்வார ரூ. 10 கோடி ஒதுக்கீடு

டெல்டா மாவட்டங்களில் 2235 கி.மீ. நீளத்துக்கு சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதன் மூலம் 1.57 லட்சம் ஏக்கர் பயன்பெறும்

3 மாவட்டங்களுக்கு மஞ்சள் இயந்திரங்கள்

ஈரோடு, கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் வழங்க ரூ. 2.12 கோடி

பண்ருட்டியில் பலா மதிப்புக்கூட்டு மையம்

பண்ருட்டியில் பலா மதிப்புக் கூட்டு மையம் அமைக்க ரூ. 16.13 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை சீர் செய்ய நிதி

தமிழகம் முழுவதும் 100 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை சீர்செய்ய ரூ. 50 கோடி ஒதுக்கீடு

10 வேளாண் பொருட்களுக்கு புவி சார் குறியீடு

இதுவரை 25 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது

நெல்லை அவுரி இலை , ஒடைப்பட்டி திராட்சை உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு

புவிசார் குறியீடு பெற உள்ள 10 பொருட்கள் எவை?

சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம் புளி...

...புவனகிரி மிதி பாகற்காய், செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி, ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை

புதிதாக 100 சேமிப்பு கிடங்குகள்

புதிதாக 100 சேமிப்பு கிடங்குகளுக்கு அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்

புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம்

வேளாண் துறையில் புத்தாக்க நிறுவனங்களுக்கான மானியம் வழங்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு

3 இடங்களில் வேளாண் கண்காட்சிகள்

வேளாண் கண்காட்சிகளை 3 இடங்களில் நடத்துவதற்கு ரூ. 9 கோடி ஒதுக்கீடு

போலி விதை விற்பனையை தடுக்க நடவடிக்கை

முன்னணி நிறுவனங்களின் விதைகளை போலியாக விற்பதை தடுக்க புதிய பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும்

நீர் வழிப் பகுதிகளில் மேம்பாடு

7 மாவட்டங்களில் 275 நீர் வழிப் பகுதிகளில் ரூ. 45 கோடியில் இயற்கை வள மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளப்படும்

புதிய ரக மலர்களை உருவாக்க ஆராய்ச்சி

சம்பங்கி, ரோஜா, செவ்வந்தியில் புதிய ரகங்களை உருவாக்க ரூ. 5.45 கோடியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்

ரூ. 16500 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க இலக்கு

2024-25 நிதியாண்டில் ரூ. 16500 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயம்

தொடக்க வேளாண் கூட்டுறவு சேவை மையங்களின் பல்வேறு சேவைகளை இணைத்து பல்நோக்கு சேவை மையமாக மாற்ற நடவடிக்கை

வரும் நிதியாண்டில் பயிர்க்கடன் வட்டி மானியத்துக்கு ரூ. 700 கோடி ஒதுக்கீடு

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு...

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கான நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு

காவிரி கால்வாய்களை தூர்வார ரூ. 110 கோடி

தென் மேற்கு பருவமழைக்கு முன்பாக காவிரி பகுதியில் 5338 கி.மீ தூரம் கால்வாய்களை தூர்வார ரூ. 110 கோடி ஒதுக்கீடு

மகளிர் குழு மூலம் தென்னை நாற்றுப் பண்ணை

ஆர்வமுள்ள மகளிர் குழுவினர் மூலம் 2.40 கோடியில் 60 தென்னை நாற்று பண்ணைகள் அமைக்க நடவடிக்கை

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments