கையை ஓங்கிய திமுக வட்டச் செயலாளர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் ஆவேசம்..!

0 758

சென்னை கொடுங்கையூரில் தங்களை தாக்கிய திமுக வட்டச் செயலாளரை போலீசார் தப்பிக்கவிட்டதாகக் கூறி மனிதநேய மக்கள் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் திக்குமுக்காடிப் போயினர்

சென்னை கொடுங்கையூரில் உள்ள மனித நேய மக்கள் கட்சியின் பகுதிச் செயலாளர் அஸ்லாம் என்பவரது வீட்டிற்கு இரு பெண்கள் சென்றதாகவும், வீட்டில் உள்ளவர்களிடம் திராவிட மாடல் அரசின் திட்டங்களில் பயன் பெறும் படிவம் என்பதை கொடுத்து நிரப்ப சொன்னதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கு மறுப்பு தெரிவித்த அஸ்லாம் அந்த படிவத்தை கிழித்து போட்டதால், திமுக வட்ட செயலாளர் அரிதாஸ் என்பவர் ஆதரவாளர்களுடன் சென்று தாக்கியதாகவும் , தங்கள் மதத்தின் பெயரை சொல்லி இழிவாக பேசியதாகவும் குற்றஞ்சாட்டி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது

அஸ்லாம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு காவல் நிலையம் வந்த ஹரிதாஸ் ஆதரவாளருக்கும், அஸ்லாம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வட்டச் செயலாளருக்கு ஆதரவாக போலீசார் நடந்து கொள்வதாக கூறி சாலைமறியலில் ஈடுபட மனிதநேய மக்கள் கட்சியினர் முயல, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட ஹரிதாஸ் காவல் நிலையத்தில் இருந்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

தகவல் அறிந்து 50க்கும் மேற்பட்ட ம.ம.க வினர் திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்

தங்களது கூட்டணி கட்சியான திமுகவில் இருந்து கொண்டு இழிவாக பேசிய வட்டச் செயலாளர் ஹரிதாஸ் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளும் வரை விடமாட்டோம் என்று ஆவேசமாயினர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே காவல் நிலையம் முன்பு நள்ளிரவில் குவிந்த திமுக மற்றும் மமகவினர் போட்டி மறியல் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments