ஆண்ட்ராய்டு, ஐபோன்களை உளவு பார்க்கும் 8 நிறுவனங்கள்... புகைப்படங்கள், வீடியோக்களை திருடுவதாக ஃபேஸ்புக் குற்றச்சாட்டு

0 660

இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 8 நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களை உளவு பார்ப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த நிறுவனங்கள் கூகுள், யூ டியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்கைப் போன்றவற்றைப் பயன்படுத்தி உளவு பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் செல்போன் பயனாளர்களின் இருப்பிடம், புகைப்படங்கள், வீடியோ மற்றும் மின்னஞ்சல்கள் உள்ளிட்ட தகவல்களை எடுத்து வருவதாகவும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.

பயனாளர்களின் தொலைபேசி எண்கள், மின்னஞ்சல்களை உளவு மற்றும் மோசடி நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 8 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் மெட்டா அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments