தமிழக பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக கல்வித்துறைக்கு 52 ஆயிரத்து 254 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற வளர்ச்சிக்கு 41 ஆயிரத்து 733 கோடி ரூபாயும், ஊரக வளர்ச்சிக்கு 27 ஆயிரத்து 922 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி துறைக்கு 22 ஆயிரத்து 310 கோடியும், மக்கள் நல்வாழ்வு துறைக்கு 20 ஆயிரத்து 198 கோடியும், நெடுஞ்சாலைகள் துறைக்கு 20 ஆயிரத்து 43 கோடியும், காவல்துறைக்கு 12 ஆயிரத்து 543 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறைக்கு 9 ஆயிரத்து 787 கோடி ரூபாயும் நீர்வளத்துறைக்கு 8 ஆயிரத்து 398 கோடி ரூபாயும், தொழில் துறைக்கு 4481 கோடி ரூபாயும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் துறைக்கு 3706 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments