சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி.... தமிழ்நாடு பட்ஜெட்டின் முக்கிய சில அம்சங்கள்...

0 588

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி 

வட சென்னை வளர்ச்சிக்கு ரூ. 1000 கோடி

வட சென்னையில் கட்டமைப்பை மேம்படுத்த 'வட சென்னை வளர்ச்சி திட்டம்' ரூ. 1000 கோடியில் மேற்கொள்ளப்படும்: தங்கம் தென்னரசு

நதிகளை புனரமைக்க திட்டம்

வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை சீரமைக்க புதிய திட்டம்: தங்கம் தென்னரசு

கோவையில் நதிகளை சீரமைக்க ரூ. 5 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்: தங்கம் தென்னரசு

சென்னை உட்பட அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க நகர்புற பசுமை திட்டம் அறிமுகம்: தங்கம் தென்னரசு

மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை: தங்கம் தென்னரசு

நெமிலி கடல் நீரை குடிநீராக்கும் திட்ட பணி விரைவில் நிறைவடையும்: தங்கம் தென்னரசு

ரூ. 7,590 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்: தங்கம் தென்னரசு

மகளிர் இலவச பேருந்து திட்டம் விரிவு

நீலகிரி, வால்பாறை போன்ற மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் விரிவாக்கம்: தங்கம் தென்னரசு

மூன்றாம் பாலினத்தவரின் கல்விக் கட்டணம் இலவசம்

மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரிக் கல்விக்கான செலவுகள் முழுவதையும் அரசு ஏற்கும்

கோவையில் புதிய ஐ.டி. பூங்கா

கோவை விளாங்குறிச்சியில் ரூ. 1000 கோடியில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம்

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று கல்லூரி செல்லும் 3 லட்சம் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ. 1000

தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ. 360 கோடி ஒதுக்கீடு

பெண் வேலை வாய்ப்பை அதிகரிக்க சிறப்பு திட்டம் ,

500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரை பணியில் அமர்த்தும் தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம்

பெண்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பெண் தொழிலாளர்களுக்கு 10% ஊதிய மானியம் அரசு வழங்கும்

1000 இடங்களில் இலவச வைஃபை சேவை

சென்னை. கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சிப் பகுதிகளின் 1000 இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும்

அரசு இணைய சேவை ரூ. 200 கோடியில் தரம் உயர்த்தப்படும்

5 இடங்களில் நியோ டைடல் பூங்காக்கள்

நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 13000 பேருக்கு வேலை

தஞ்சை, சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் புதிய நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்

நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 13 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

3000 புதிய பேருந்துகள் வாங்க முடிவு

இந்தாண்டு 500 மின் பேருந்துகள் செயல்படும்

தமிழக போக்குவரத்துத் துறைக்கு 3000 புதிய பேருந்துகள் வாங்க முடிவு

500 மின்சார பேருந்துகள் இந்த ஆண்டு செயல்பாட்டிற்கு வரும்

தமிழக கடற்கரைகளை மேம்படுத்த திட்டம்

சென்னை மெரீனா, கடலூர் சில்வர் பீச், விழுப்புரம் மரக்காணம், நாகை காமேஸ்வரம், புதுக்கோட்டை கட்டுமாவடி...

ராமநாதபுரம் அரியமான், தூத்துக்குடி காயல்பட்டினம், திருநெல்வேலி கோடாவிளை ஆகிய 8 கடற்கரைகளை மேம்படுத்த ரூ. 250 கோடி ஒதுக்கீடு

ஆயிரமாண்டு பழைய கோயில்கள் புனரமைப்பு

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு

14 நகரங்களில் புறவழிச் சாலைகள்

ரூ. 665 கோடியில் 14 நகரங்களில் புறவழிச் சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை

திருச்சி - ஸ்ரீரங்கம் உயர்மட்ட சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்

பேரிடர்களால் சிக்கலில் நிதி நிலை

பேரிடர்களுக்கு மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை

மத்திய அரசு ஒப்புதல் தராததால் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ. 9000 கோடி கூடுதல் செலவு

மாநில அரசு கடன் பெற மத்திய அரசு கடும் நிபந்தனைகள் விதிப்பதால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments