தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்..!…

0 1703

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல்

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார்

நாட்டின் 2ஆவது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு: தங்கம் தென்னரசு

தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் தங்கம் தென்னரசு

மாபெரும் தமிழ்க்கனவு என்ற பெயரில் 7 பகுதிகளாக தமிழக பட்ஜெட் தாக்கல்

சமூக நீதி, கடைக்கோடி மனிதனுக்குமான நல வாழ்வு, இளைய தமிழகம் உள்ளிட்ட தலைப்புகளில் பட்ஜெட் தாக்கல்

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்

100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகள் தமிழர்களின் வாழ்வை தலை நிமிர்த்தியுள்ளது: தங்கம் தென்னரசு

image

தமிழர்களின் வாழ்வை தலை நிமிர்த்திய பட்ஜெட்

மதிய உணவு, குடிசை மாற்று திட்டங்கள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு தங்கம் தென்னரசு உரை

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு ஓராண்டில் ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது: தங்கம் தென்னரசு

இயற்கை பேரிடர் விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கிறது மத்திய அரசு: தங்கம் தென்னரசு

சிலப்பதிகாரம், மணிமேகலையை 25 மொழிகளில் மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு

சிலம்பு, மணிமேகலையை மொழிபெயர்க்க ரூ. 2 கோடி

தமிழக இலக்கியப் படைப்புகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல நடவடிக்கை: தங்கம் தென்னரசு

தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்க நடவடிக்கை

தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் 3 ஆண்டுகளில் 600 நூல்கள் வெளியிடப்படும்: தங்கம் தென்னரசு

image

மொழி தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு

தமிழ் இணைய கல்வி கழக மின் நூலகத்திற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு

சௌராஷ்டிரா மற்றும் பழங்குடியின மொழிகளை ஒலி வடிவில் இனவரைவியல் செய்ய ரூ. 2 கோடி: தங்கம் தென்னரசு

தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ. 5 கோடி நிதி

கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு

கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உட்பட 8 இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த ரூ. 5 கோடி நிதி: தங்கம் தென்னரசு

image

மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் உலகின் 100 நூலகங்களில் இடம் பெற ரூ. 2 கோடி ஒதுக்கீடு

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் ரூ. 17 கோடியில் அமைக்கப்படும்: தங்கம் தென்னரசு

சிந்து வெளி நூற்றாண்டு கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படும்: தங்கம் தென்னரசு

தமிழர்களின் பாரம்பரியங்களைக் கண்டறிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்படும்: தங்கம் தென்னரசு

குடிசை இல்லா தமிழ்நாடே இலக்கு

2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்

குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் வகையில் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் ஊரகப்பகுதியில் கட்டப்படும்

image

ரூ. 1000 கோடி செலவில் கிராம சாலைகள்

கிராமச் சாலை மேம்பாட்டுக்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு

image

இந்தாண்டில் 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்படும்: தங்கம் தென்னரசு

சென்னை மாநகராட்சியை அடுத்துள்ள விரிவாக்க பகுதிகளில் ரூ.300 கோடியில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்

ரூ. 500 கோடியில் 5000 நீர்நிலைகள் புனரமைப்பு

குடிநீர் வசதி மேம்பாடு

ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய சிறு பாசன ஏரிகள், ரூ. 500 கோடி செலவில் 5000 நீர்நிலைகள் புனரமைக்கப்படும்

100 நாள் வேலை என்று அழைக்கப்படும் ஊரக வேலை திட்டத்திற்கு ரூ. 3300 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு

திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய நிறுவனம் அமைக்கப்படும்: தங்கம் தென்னரசு

முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டம்

5 லட்சம் ஏழைக் குடும்பங்களில் வறுமையை அகற்ற முதலமைச்சரின் தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டம் அறிமுகம்: தங்கம் தென்னரசு

image

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி

சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு

image

சென்னையில் சாலைகளை அகலப்படுத்த ரூ. 300 கோடி

சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

வட சென்னை வளர்ச்சிக்கு ரூ. 1000 கோடி

வட சென்னையில் கட்டமைப்பை மேம்படுத்த 'வட சென்னை வளர்ச்சி திட்டம்' ரூ. 1000 கோடியில் மேற்கொள்ளப்படும்: தங்கம் தென்னரசு

image

சென்னையில் போக்குவரத்து நெரிசல்மிக்க ஆர்.கே. சாலை, புதிய ஆவடி சாலை, பேப்பர் மில் சாலை உள்ளிட்டவை ரூ. 300 கோடியில் அகலப்படுதப்படும்

சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு

 பூவிருந்தவல்லி அருகே அரசு தனியார் பங்களிப்புடன் புதிய, நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும்: தங்கம் தென்னரசு

ரூ. 2500 கோடியில் சாலை மேம்பாடு

நகர்ப்புறங்களில் 4,448 கி.மீ. சாலைகளை சீரமைக்க ரூ. 2500 கோடி நிதி ஒதுக்கப்படும்: தங்கம் தென்னரசு

ரூ. 1500 கோடியில் அடையாறு சீரமைக்கப்படும்

அடையாறை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

ரூ. 1500 கோடியில் அடையாறை மீட்டெடுக்க புதிய திட்டம்: தங்கம் தென்னரசு

அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு உள்ளிட்டவை சீரமைக்கப்படும்: தங்கம் தென்னரசு

நதிகளை புனரமைக்க திட்டம்

வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை சீரமைக்க புதிய திட்டம்: தங்கம் தென்னரசு

கோவையில் நதிகளை சீரமைக்க ரூ. 5 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்: தங்கம் தென்னரசு

சென்னை உட்பட அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க நகர்புற பசுமை திட்டம் அறிமுகம்: தங்கம் தென்னரசு

மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை: தங்கம் தென்னரசு

நெமிலி கடல் நீரை குடிநீராக்கும் திட்ட பணி விரைவில் நிறைவடையும்: தங்கம் தென்னரசு

ரூ. 7,590 கோடியில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்: தங்கம் தென்னரசு

3 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள்

நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலூருக்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் அறிமுகம்: தங்கம் தென்னரசு

நாமக்கல்லுக்கு ரூ. 350 கோடி, திண்டுக்கல்லுக்கு ரூ. 565 கோடி, பெரம்பலூருக்கு ரூ. 366 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு

மகளிர் உரிமை திட்டத்துக்கு ரூ. 13720 கோடி

1 கோடியே 17 லட்சம் குடும்பங்கள் பயன் பெற மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு ரூ. 13720 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு

image

மகளிர் இலவச பேருந்து திட்டம் விரிவு

நீலகிரி, வால்பாறை போன்ற மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம் விரிவாக்கம்: தங்கம் தென்னரசு

image

அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் நிதி

புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்

வரும் கல்வி ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவுபடுத்தப்படும்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவு படுத்த ரூ. 360 கோடி ஒதுக்கீடு

image

காலை உணவு திட்டம் விரிவாக்கம்

முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை மேலும் 2.50 லட்சம் மாணவர்களுக்கு விரிவுபடுத்த ரூ. 600 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ. 3123 கோடி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு

image

10000 புதிய சுய உதவிக் குழுக்கள்

வரும் நிதியாண்டில் 10 ஆயிரம் புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 35 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு

கோவை, மதுரையில் 3 மகளிர் தங்கும் விடுதிகள்

கோவை, மதுரையில் ரூ. 26 கோடியில் 3 புதிய தோழி மகளிர் தங்கும் விடுதிகள் கட்டப்படும்

தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்க திட்டம்

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச் சத்து வழங்கும் திட்டம் அறிமுகம்

மூன்றாம் பாலினத்தவரின் கல்விக் கட்டணம் இலவசம்

மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரிக் கல்விக்கான செலவுகள் முழுவதையும் அரசு ஏற்கும்

image

பள்ளிக் கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி

ரூ. 1000 கோடியில் தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்

15 ஆயிரம் திறன்மிகு வகுப்பறைகள் ரூ. 300 கோடியில் உருவாக்கப்படும்

இல்லம் தேடி கல்விக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு

image

சமூகப் பாதுகாப்புத் துறை குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவைகள் துறை என பெயர் மாற்றம்

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 44,042 கோடி ஒதுக்கீடு

தொழில் படிப்பு மாணவர்களுக்கான கல்வி செலவை அரசு ஏற்கும் வகையில் ரூ. 511 கோடி ஒதுக்கீடு

கோவையில் கருணாநிதி பெயரில் நூலகம்

கோவையில் கருணாநிதி பெயரில் உலகத் தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்படும்

image

உயர்கல்வித் துறைக்கு ரூ. 8212 கோடி ஒதுக்கீடு

வரும் நிதியாண்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ. 8212 கோடி நிதி ஒதுக்கீடு

தொழிற்துறை 4.0 தரத்திற்கு 45 பாலிடெக்னிக்குகள் உயர்த்தப்படும்

கோவையில் புதிய ஐ.டி. பூங்கா

கோவையில் ரூ. 1000 கோடியில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா

image

தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை

குடிமைப் பணி, வங்கி உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ. 6 கோடி ஒதுக்கீடு

தமிழ்ப் புதல்வன் புதிய திட்டம் அறிமுகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டம்

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று கல்லூரி செல்லும் 3 லட்சம் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ. 1000

தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ. 360 கோடி ஒதுக்கீடு

image

நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ. 200 கோடி

மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

image

விளையாட்டுத் துறைக்கு ரூ. 440 கோடி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ. 440 கோடி ஒதுக்கீடு

 ராமநாதபுரத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம்

ராமநாதபுரத்தில் கடல் சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்

10 புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள்

ரூ. 111 கோடியில் 10 புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்

1 லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன்

1 லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ரூ. 2500 கோடி ஒதுக்கீடு

image

6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள்

தமிழகத்தில் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்

மக்களை தேடி மருத்துவத்துக்கு ரூ. 843 கோடி

மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு ரூ. 843 கோடி ஒதுக்கீடு

நம்மை காக்கும் 48 திட்டத்துக்கான மருத்துவ செலவுத் தொகை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 20,198 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

தஞ்சை செங்கிப்பட்டியில் புதிய சிப்காட் பூங்கா

தஞ்சை செங்கிப்பட்டியில் ரூ. 120 கோடியில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும்

புற்றுநோய் சிகிச்சைக்கு மேலாண்மை இயக்கம்

தமிழகத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கு மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும்

மருத்துவ கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 333 கோடி

மருத்துவ கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 333 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

பெண் வேலை வாய்ப்பை அதிகரிக்க சிறப்பு திட்டம் ,

500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரை பணியில் அமர்த்தும் தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம்

பெண்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பெண் தொழிலாளர்களுக்கு 10% ஊதிய மானியம் அரசு வழங்கும்

குலசேகரப்பட்டிணத்தில் டிட்கோ பூங்கா

குலசேகரப் பட்டிணம் அருகே 2 ஆயிரம் ஏக்கரில் டிட்கோ மூலம் புதிய பூங்கா அமைக்கப்படும்

விருதுநகர், சேலத்தில் ஜவுளிப் பூங்காக்கள்

விருதுநகர் மற்றும் சேலத்தில் ரூ. 2,483 கோடியில் புதிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்

இரு ஜவுளிப் பூங்காக்கள் மூலம் 2.08 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்

தூத்துக்குடியில் விண்வெளி உந்துசக்தி பூங்கா

தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் தொழில் மற்றும் உந்துசக்திப் பூங்கா அமைக்கப்படும்

தொழில் முதலீடு ஊக்குவிப்பு துறைக்கு 2795 கோடி

தமிழ்நாடு தொழில் முதலீடு ஊக்குவிப்பு துறைக்கு ரூ. 2795 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

தமிழகத்தில் உலகப் புத்தொழில் மாநாடு

தமிழ்நாட்டில் முதன் முறையாக உலகப் புத்தொழில் மாநாடு நடத்தப்படும்

மதுரையில் தொழில் புத்தாக்க மையம்

மதுரையில் 25,500 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும்

சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறைக்கு 1557 கோடி

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைக்கு ரூ. 1557 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

6 இடங்களில் குறு தொழில் தொகுப்புகள்

விருதுநகர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டையில் குறு தொழில் தொகுப்புகள் அமைக்கப்படும்

1000 இடங்களில் இலவச வைஃபை சேவை

சென்னை. கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சிப் பகுதிகளின் 1000 இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும்

அரசு இணைய சேவை ரூ. 200 கோடியில் தரம் உயர்த்தப்படும்

image

செயற்கை நுண்ணறிவு இயக்கம் அறிமுகம்

முதலமைச்சர் தலைமையில் செயற்கை நுண்ணறிவு இயக்கம் அறிமுகப்படுத்தப்படும்

5 இடங்களில் நியோ டைடல் பூங்காக்கள்

நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 13000 பேருக்கு வேலை

தஞ்சை, சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் புதிய நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்

நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 13 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

நீர்வளத்துறைக்கு 8398 கோடி

நீர்வளத்துறைக்கு ரூ. 8398 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

மாநிலத் தரவு மையத்தை மேம்படுத்த 200 கோடி

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 200 கோடியில் மாநிலத் தரவு மையம் மேம்படுத்தப்படும்

கல்லணைக் கால்வாயை புனரமைக்க 400 கோடி

கல்லணை கால்வாயின் 2-ஆம் கட்ட விரிவாக்கத்திற்காக ரூ. 400 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்

கல்லணைக் கால்வாய் விரிவாக்கம் மூலம் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.3 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் மேம்படும்

அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க நிதி

அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க ரூ. 50 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்

3000 புதிய பேருந்துகள் வாங்க முடிவு

இந்தாண்டு 500 மின் பேருந்துகள் செயல்படும்

தமிழக போக்குவரத்துத் துறைக்கு 3000 புதிய பேருந்துகள் வாங்க முடிவு

500 மின்சார பேருந்துகள் இந்த ஆண்டு செயல்பாட்டிற்கு வரும்

image

சென்னை மெட்ரோ ரயிலுக்கு 12 ஆயிரம் கோடி

சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ. 12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

மெட்ரோ ரயிலை மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு விரிவாக்கம் செய்வதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

கோயம்பேடு முதல் ஆவடி வரை, பூவிருந்தவல்லி முதல் பரந்தூர் வரை மேலும் 2 விரிவாக்கத் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

சென்ட்ரலில் புதிய பல்துறை அலுவலகக் கட்டடம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரில் 10 லட்சம் சதுர அடியில் பல அடுக்கு பல்துறை அலுவலகக் கட்டடம் கட்டப்படும்

பல்துறை அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு ரூ. 688 கோடி ஒதுக்கீடு

பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும்

பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை

image

பழங்குடியினர் பகுதிகளை மேம்படுத்த தொல்குடி திட்டம்

ரூ. 1000 கோடியில் தொல்குடித் திட்டம்

பழங்குடியினர் வாழ்விடத்தை மேம்படுத்த தொல்குடி திட்டம் ரூ. 1000 கோடியில் செயல்படுத்தப்படும்

அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம்

அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ. 3706 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரியான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்

சிறுபான்மையினர் நலத்துறைக்கு 1429 கோடி

சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ. 1,429 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

தமிழக கடற்கரைகளை மேம்படுத்த திட்டம்

சென்னை மெரீனா, கடலூர் சில்வர் பீச், விழுப்புரம் மரக்காணம், நாகை காமேஸ்வரம், புதுக்கோட்டை கட்டுமாவடி...

ராமநாதபுரம் அரியமான், தூத்துக்குடி காயல்பட்டினம், திருநெல்வேலி கோடாவிளை ஆகிய 8 கடற்கரைகளை மேம்படுத்த ரூ. 250 கோடி ஒதுக்கீடு

சென்னையில் ஆட்டிஸம் மையம்

ரூ. 25 கோடியில் சென்னையில் ஆட்டிஸம் மையம் அமைக்கப்படும்

ஆயிரமாண்டு பழைய கோயில்கள் புனரமைப்பு

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு

மாவட்டந்தோறும் சுற்றுலா வளர்ச்சி குழுமம்

சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த மாவட்டம் தோறும் ஆட்சியர்கள் தலைமையில் சுற்றுலா வளர்ச்சி குழுமம் உருவாக்கப்படும்

தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த நிதி

தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, இனப்பெருக்க மையங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

image

மீனவர்களுக்கு வசதி செய்து தர 450 கோடி

குமரி, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரத்தில் தூண்டில் வளைவு, மீன் இறங்கு தளம் அமைக்க ரூ. 450 கோடி ஒதுக்கீடு

3 மாவட்டங்களில் 10 சிறிய ஜவுளிப் பூங்காக்கள்

கரூர், ஈரோடு, விருதுநகரில் 10 சிறிய ஜவுளிப் பூங்காக்கள் நிறுவப்படும்

சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க ரூ. 20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு

ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றியத்துக்கு நிதி

ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கு ரூ. 60 கோடியில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும்

கைத்தறி, கைவினை பொருள் விற்பனை வளாகம்

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி, கைவினைப் பொருட்களை விற்க சென்னையில் வணிக வளாகம்

4 லட்சம் சதுர அடியில் அமையும் வணிக வளாகத்துக்கு ரூ. 227 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

முட்டுக்காட்டில் பன்னாட்டு அரங்கம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படும்

3 லட்சம் சதுர அடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்

புராதன கட்டடங்களை புனரமைக்க 50 கோடி

புராதன கட்டடங்களை பழமை மாறாமல் புனரமைக்க ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு

சாலை மேம்பாட்டுக்கு 665 கோடி

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ. 665 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

14 நகரங்களில் புறவழிச் சாலைகள்

ரூ. 665 கோடியில் 14 நகரங்களில் புறவழிச் சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை

திருச்சி - ஸ்ரீரங்கம் உயர்மட்ட சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்

image

திருவான்மியூர் - உத்தண்டி வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க நான்கு வழி உயர் மட்ட வழித்தடம் அமைக்க ஆய்வு

திருப்பரங்குன்றம், திருநீர்மலையில் ரோப் கார்

திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதிகள் ஏற்படுத்தப்படும்

10000 அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

வரும் ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்

2 ஆண்டுகளில் 50000 இளைஞர்களுக்கு அரசு வேலை

அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணிகள் வழங்கப்படும்

திருவெறும்பூரில் நவீன சிறைச்சாலை

திருச்சி திருவெறும்பூரில் ரூ. 104 கோடியில் நவீன சிறைச்சாலை கட்டப்படும்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க நடவடிக்கை

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதற்கான சட்ட முன்வடிவு நடப்புக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும்

1400 புதிய மழைமானிகளை நிறுவ நடவடிக்கை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1400 புதிய மழைமானிகளை நிறுவ நடவடிக்கை

ராமநாதபுரம் மற்றும் ஏற்காட்டில் ரூ. 56 கோடியில் புதிய வானிலை ரேடார் கருவிகள் அமைக்கப்படும்

வெள்ளம் புயலை கண்காணிக்க தொழில் நுட்ப மையம் அமைக்கப்படும்

சென்னை, நாகையில் கடல் ஆமை பாதுகாப்பு மையம்

சென்னை மற்றும் நாகப்பட்டிணத்தில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்

தஞ்சை மனோராவில் கடல் பசு பாதுகாப்பு மையம்

தஞ்சை மனோரா பகுதியில் கடல் பசு பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்படும்

எண்ணூர் கடற்கரையை சீரமைக்க 40 கோடி

சென்னையை அடுத்துள்ள எண்ணூர் கடற்கரையை சீரமைக்க ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

பத்திரப்பதிவுத் துறையை நவீனப்படுத்த நிதி

பத்திரப்பதிவுத் துறையை நவீனப்படுத்த ரூ. 133 கோடி நிதி ஒதுக்கீடு

பேரிடர்களால் சிக்கலில் நிதி நிலை

பேரிடர்களுக்கு மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை

மத்திய அரசு ஒப்புதல் தராததால் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ. 9000 கோடி கூடுதல் செலவு

மாநில அரசு கடன் பெற மத்திய அரசு கடும் நிபந்தனைகள் விதிப்பதால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிப்பு

வருவாய் பற்றாக்குறை அதிகரிப்பு

வருவாய் பற்றாக்குறை ரூ. 44,907 கோடியாக அதிகரிப்பு

நிதிப் பற்றாக்குறை ரூ. 94,060 கோடியாக அதிகரிப்பு

நிதிப்பற்றாக்குறை ரூ. 94,060 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பீடு

சொந்த வரி வருவாய் ரூ. 1,95,173 கோடி

வரும் நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ. 1,95,173 கோடியாக இருக்கும் என மதிப்பீடு

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments