காவிரி உரிமையை தி.மு.க. விட்டுக் கொடுத்து விட்டது: எடப்பாடி பழனிசாமி
காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசாக தி.மு.க ஆட்சி உள்ளதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய இ.பி.எஸ்., இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரசுடன் பேசி காவிரி நீரை தி.மு.கவால் பெற்றுத் தர முடியவில்லை என்றார்.
கடன் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும் தான் தமிழகம் முதலிடம் வகிப்பதாகத் தெரிவித்த இ.பி.எஸ்., டெல்டா மாவட்டங்களில் ஈத்தேன், மீத்தேன் எடுப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது தி.மு.க என்றும் அதனை தடுத்து நிறுத்தியது அ.தி.மு.க எனவும் கூறினார்.
Comments