போக்குவரத்து காவல்துறையின் @Roadraja திட்டத்திற்கு பொதுமக்களிடம் வரவேற்பு..!!
போக்குவரத்து விதிகளை மீறுவோர் குறித்து வீடியோ, புகைப்படத்துடன் புகாரளிக்கும் ரோடுராஜா திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், சிக்னலை மீறுவோரை பொதுமக்களே புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து @Roadraja என டேக் செய்கின்றனர்.
இத்திட்டத்தில் வரப்பெறும் புகார்களை விசாரணை நடத்தி விதிமீறல் உறுதியானால் வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.
Comments