ரூ. 5 லட்சம் பரிசு விழுந்ததாக போலி லிங்க் அனுப்பி ரூ.10,000 பறிக்க முயற்சி..!!

0 484

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரதீப் என்பவரிடம் முகநூல் பக்கம் மூலம் கேரள போலி லாட்டரியை விற்பனை செய்த கும்பல், 5-லட்சம் ரூபாய் பரிசு விழுந்ததாக 10 ஆயிரம் ரூபாயை சுருட்ட முயன்றனர்.

வாட்ஸ் ஆப் மூலம் போலி லிங்க் அனுப்பிய மோசடிக் கும்பல் பரிசுத் தொகைக்கு ஜி.எஸ்.டி.வரியாக 10 ஆயிரம் ரூபாயை போன் பே வழியாக அனுப்பும்படி வற்புறுத்தினர்.

சுதாரித்த பிரதீப் இணைப்பை துண்டித்து தப்பினார். அங்கு இதேபாணியில் மோசடிக் கும்பல் பலரிடம் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments