ரஷ்ய அதிபர் புடினை ராட்சசன் என்று விமர்சித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

0 628

ரஷ்யாவில் அதிபரை விமர்சித்து வந்த அலெக்சி நவல்னி திடீரென உயிரிழந்த விவகாரத்தில், அதிபர் புடினை ராட்சசன் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமர்சித்தார்.

ஒட்டாவா நகரில் ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், ரஷ்ய மக்களின் விடுதலைக்காக போராடுபவர்களை அழித்தொழிக்க புடின் எந்த நிலைக்கும் செல்வார் என்றும் ஜனநாயகத்திற்காக போராடிய நவல்னியின் துணிச்சல் அபாரமானது என்றும் தெரிவித்தார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 47 வயது நவல்னி, உயிரிழந்ததாக ரஷ்ய சிறை நிர்வாகம் அறிவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments