அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு 355 மில்லியன் டாலர் அபராதம் - நியூயார்க் நீதிபதி உத்தரவு

0 562

கடன் வாங்குவதற்காக சொத்து மதிப்பை மோசடியாக அதிகரித்துக் காட்டியதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 355 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த நியூயார்க் நகர நீதிபதி ஆர்தர் எங்கோரோன் உத்தரவிட்டுள்ளார்.

நியூயார்க் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநராக டிரம்ப் மூன்று ஆண்டுகளுக்குச் செயல்படவும் நீதிபதி தடை விதித்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய டிரம்ப்பின் இரு மகன்களும் தலா 4 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, நிறுவனத்தின் இயக்குநர்களாக அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குச் செயல்படவும் தடை விதித்தார்.

இந்த மோசடி குற்றச்சாட்டை மூவரும் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments