இன்சாட்-3 டி.எஸ். செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி எஃப்-14 இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ
இன்சாட்-3 DS செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி - எஃப் 14 ராக்கெட் இன்று விண்ணில் பாய உள்ள நிலையில் அதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வானிலை மற்றும் இயற்கை பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே துல்லியமாக பெறும் வகையில் இன்சாட்- 3 டி.எஸ் செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இமேஜர், சவுண்டர், டிரான்ஸ்பாண்டர் உள்ளிட்ட கருவிகள் அதில் இடம்பெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இமேஜர் மற்றும் சவுண்டர் கருவிகள் வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தின் அளவு மற்றும் வெப்பத்தை கணக்கிடும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 5.35 மணிக்கு ராக்கெட்டை ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
Comments