பாலியல் துன்புறுத்தல் புகார் கூறிய பெண்களை சந்திக்க சென்ற மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவை தடுத்து நிறுத்திய மேற்கு வங்க போலீஸ்
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் என்பவர் மீது பாலியல் புகார் கூறிய பெண்களை சந்திக்கச் சென்ற மத்திய அமைச்சர்கள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினரை போலீஸ் தடுத்து நிறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.
சந்தேஷ்காளி கிராமத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை அரங்கேற்றப்பட்டதாக கூறி போராட்டம் நீடிக்கும் நிலையில், மத்திய அமைச்சர்கள் அன்னபூர்ணா தேவி, பிரதிமா பாவ்மிக் அடங்கிய குழுவை போலீசார் தடுத்தபோது வாக்குவாதம் மூண்டது
புகாருக்கு ஆளாகி தலைமறைவாக உள்ள ஷேக் ஷாஜகானை கைது செய்ய அவசரம் காட்டாமல், ஆறுதல் கூறச் சென்ற தங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி தெரிவித்தார்.
இதனிடையே, பெண்களின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக மாநில மகளிர் ஆணையம் மற்றும் காவல்துறை என இரண்டு குழுக்களை அனுப்பி வைத்ததாக முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்தார்.
Comments