தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க. அழகிரி விடுதலை

0 650

2011 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி , மதுரை மாநகர முன்னாள் துணை மேயர் மன்னன், மதுரை மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் உள்பட 17 பேரை மதுரை மாவட்ட ஜே.எம்.1 நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.

2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற தாசில்தார் காளிமுத்துவை தாக்கினர் என்பது இவர்கள் மீதான குற்றச்சாட்டு.

குற்றஞ்சாட்டப்பட்ட 21 பேரில் 4 பேர் காலமானதை அடுத்து எஞ்சிய 17 பேரும் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பு வெளியானபோது அழகிரி உள்பட 17 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments