நாட்டமை செய்யும் பெண் கவுன்சிலர்களின் அடங்கா கணவன்கள்..! ரவுண்டு கட்ட ஆரம்பிச்சுட்டாங்க
தர்மபுரி நகராட்சிக்குள் அமர்ந்து கோவில் பிரச்சனையில் நாட்டாமை செய்த நகராட்சி தலைவரின் கணவரை சிலர் சுத்துபோட்ட நிலையில் , சென்னையில் பெண் கவுன்சிலரின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது கணவரை அவரது கட்சியினரே தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
தர்மபுரி நகராட்சி அலுவலகத்திற்குள் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு இருக்கும் இவர்தான் நகராட்சி தலைவர் லட்சுமியின் கணவன் நாட்டான் மது..!
தருமபுரி நகராட்சி பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் பெற சென்றவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாததால் அவர்களை நோக்கி அடிப்பது போல சென்றதால் , எதிர் தரப்பினர் சுத்துப்போட்டதால் நாட்டான் மது சிக்கிக் கொண்டார்
உடனடியாக நகராட்சி தலைவர் லட்சுமி அவர்களை வெளியே போகச்சொல்லி தனது கணவர் நாட்டான்மதுவை மீட்டார்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்த லட்சுமி, தன் கணவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்றே தெரியாது என்றார். அருகில் இருந்த கணவர் இருவரது பெயரை குறிப்பிட்டு சொன்னதும் அதையே கிளிப்பிள்ளை போல திரும்பச்சொன்னார்.
அதே போல சென்னை மா நகராட்சியின் 153 வது வார்டு கவுன்சிலர் சந்தியின் கணவர் ராமலிங்கத்துக்கும், 154 வது திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான ரவிக்கும் ஏற்பட்ட தகராறில், கவுன்சிலர் இருக்கையில் நீ எப்படி அமர்ந்து பேசுவாய் ? எனக்கேட்டு ராமலிங்கத்தை தாக்கியதாகவும், பதிலுக்கு ராமலிங்கமும் திருப்பி தாக்கியதாகவும் கூறப்படுகின்றது
இருவரும் திமுகவை சேர்ந்தவர்கள் என்றும் ராமாபுரம் பகுதியில் புது வீடு கட்டும் உரிமையாளர்களிடம் கட்டிங் வாங்குவது தொடர்பாக இரு வருக்கும், தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்டும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை.
Comments