தேர்தல் பத்திர முறை என்பது என்ன? ஏன் ரத்தானது?
உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள தேர்தல் பத்திர திட்டம், 2018-ஆம் ஆண்டு மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆயிரம், பத்தாயிரம், 1 லட்சம், 10 லட்சம், 1 கோடி ஆகிய ரூபாய் மதிப்புகளில் ஸ்டேட் வங்கி வெளியிட்ட இந்த பத்திரங்களை தனிநபர் அல்லது நிறுவனங்கள் எத்தனை வேண்டுமானாலும் வாங்கி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் 1 சதவீதத்துக்கு குறைவில்லாத வாக்குகளைப் பெற்ற தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளைப் பெற்ற அரசியல் கட்சிகள், அதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை. நிதி கொடுப்போரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படுவதால் கருப்பு பண புழக்கத்தை ஊக்குவிக்கும் என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Comments