மந்தநிலையால் உலகின் 3-வது பெரிய பொருளாதார நிலையில் இருந்து சறுக்கிய ஜப்பான்
ஜப்பானில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ச்சியான காலாண்டுகளில் பொருளாதாரச் சரிவு காரணமாக, மந்தநிலை உருவாகியுள்ளதாகவும், இதன்காரணமாக உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை அந்நாடு இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு, உலகளாவிய மந்த நிலை மற்றும் உள்நாட்டு அரசியல் ஸ்திரமின்மை உள்ளிட்டவை பொருளாதார மந்தநிலைக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. தற்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஜெர்மனி உயர்ந்துள்ளது.
Comments