ஓட்டலின் மேற்கூரையில் பதுங்கிய 7 அடி விரியன் விஷப் பாம்பு.. ஒரு மணி நேரம் போராடி உயிருடன் பிடித்த தீயணைப்பு வீரர்கள்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலின் மேற்கூரை ஓடுகளுக்கு இடையே பதுங்கியபடி சீறிக் கொண்டிருந்த 7 அடி நீளம் உள்ள கொடிய விஷம் கொண்ட விரியன் பாம்பை தீயணைப்புப் படை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் பிடித்தனர். பிடிபட்ட விஷ பாம்பை அவர்கள் பத்திரமாக எடுத்துச் சென்று காப்புக்காடு பகுதியில் விட்டனர்.
Comments