பாகிஸ்தானின் அடுத்த அதிபராக முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
பாகிஸ்தானின் அடுத்த அதிபராக முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக, நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சிக்கும், பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது அதிபராக உள்ள ஆரிஃப் ஆல்வியின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.
பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் பதவி ஏற்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், பிற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் நவாஸ் மற்றும் பிலாவல் பூட்டோ கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்
Comments