இந்திய கடற்படைக்கு ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள் வாங்க ரூ. 1,752.13 கோடி மதிப்பில் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் துப்பாக்கிகளை வாங்கும் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
கப்பல்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கவும், இரவு, பகல் எந்த நேரத்திலும் சிறிய இலக்குகளை துல்லியமாகத் தாக்கவும் இந்தவகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
463 துப்பாக்கிகளைத் தயாரிப்பதற்காக கான்பூரில் உள்ள அட்வான்ஸ்டு வெபன் எக்யூப்மென்ட் இந்தியா நிறுவனத்துடன் ஆயிரத்து 752 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Comments