கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று துவக்கம்... தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன
இயேசு சிலுவையில் உயிர்நீத்த புனித வெள்ளி வரையிலான கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று துவங்கியதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
நாகர்கோவில் அருகே கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் சாம்பல் புதன் தவக்கால தொடக்க திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள் சாம்பல் பூசி தவக்காலத்தை தொடங்கினர்.
புதுச்சேரியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா தேவாலயத்தில் பங்கு தந்தை பிச்சைமுத்து தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
பாளையங்கோட்டை சவேரியார் பேராலய சிறப்பு திருப்பலியில் பங்கேற்ற பேராயர் அந்தோணிசாமி, கிறிஸ்தவ மக்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவையிட்டார்.
தூத்துக்குடியில் பனிமயமாதா, திரு இருதய ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
காரைக்குடி தூய சகாய அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், அனைவரது நெற்றியிலும் சம்பலில் சிலுவையிடப்பட்டது.
Comments