இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ரீதியான தொடர்பு வலுவாக இருப்பதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவிப்பு
இந்தியா அமெரிக்கா இடையே ராணுவ ரீதியான தொடர்பு வலுவாக இருப்பதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.
இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பரிமாறிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் துணை ஊடகச் செயலாளர், சப்ரினா சிங், இருநாட்டு ராணுவத்தினரும் தங்கள் மண்டலத்தில் என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறினார்.
இதனிடையே இந்திய ராணுவத் தலைமைத்தளபதி மனோஜ் பாண்டே நான்கு நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். அங்கு அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி உள்ளிட்ட மூத்த ராணுவ அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
Comments