வழக்கு ஒன்றில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யத் தவறிய காவல் ஆய்வாளருக்கு ஏன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கக்கூடாது?: நீதிபதி கேள்வி
தேவகோட்டையைச் சேர்ந்த முனியப்ப கல்யாணி என்பவர் 2015ஆம் ஆண்டு முதல் தமது பாஸ்போட் விண்ணப்பம் நிலுவையில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதால் பாஸ்போர்ட் வழங்க முடியாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 2014ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு முடித்துவைக்கப்பட்டுவிட்டதாகவும் அதன் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யாதது காவல்துறையின் தவறு என்றும் கூறிய நீதிபதி, சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளருக்கு ஏன் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
Comments